Freelancer / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' கிளர்ச்சியாளர்கள் வசம் தற்போது சிரியா சென்றுள்ள நிலையில், சிரியா பிரதமர் முகமது காசி ஜலாலி வெளியிட்ட வீடியோ பதிவில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கவும், ஒரு இடைக்கால அரசை நிறுவவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கிளர்ச்சி குழுவின் தலைவர்களை தொடர்பு கொண்டதாகவும், அடக்குமுறைகள் இருக்காது என்று கிளர்ச்சியாளர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
சிரியா கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் சென்ற நிலையில், அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் பி 52, எப் 15 எஸ், ஏ-10 எஸ் ஆகிய போர் விமானங்கள் மத்திய சிரியாவில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
29 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago