Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒகினாவாவில், ஐக்கிய அமெரிக்க இராணுவத் தளமொன்றின் சர்ச்சைக்குரிய இடமாற்றம் தாமதப்படுத்தப்படாதென ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, நேற்றுத் தெரிவித்துள்ளார். குறித்த நகர்வை, பொதுவாகெடுப்பில் வாக்காளர்கள் நிராகரித்துள்ளதுக்கு மத்தியிலேயே பிரதமர் அபேயின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.
ஃபுயூடென்மா தளத்தை இடமாற்றுவதற்றுவதற்கு, ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் இணங்கி 20 ஆண்டுகளாகி விட்டது எனத் தெரிவித்த பிரதமர் அபே, இதை இன்னும் தாமதப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பிராதயபூர்வமான பொதுவாக்கெடுப்பில், ஒகினாவாவிலுள்ள வாக்காளர்கள் குறித்த திட்டத்தை நிராகரித்த பின்னரே பிரதமர் அபே இவ்வாறு கூறியுள்ளார்.
வாக்களிக்கத் தகுதியானவர்களில் 52 சதவீதமானோரின் வாக்களிப்பில், குறித்த நகர்வுக்கெதிராக 72 சதவீதமானோர் வாக்களித்ததுடன், 19 சதவீதமானோர் ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முடிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த பிரதமர் அபே, ஒகினாவாவில் வசிப்போரை புரிந்து கொள்ள எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஒகினாவானது, ஜப்பானின் மொத்த தரைப் பகுதியின் ஒரு சதவீதத்துக்கு குறைவான பகுதியென்றபோதும், ஜப்பானிலுள்ள ஏறத்தாழ 47,000 ஐக்கிய அமெரிக்க படையினரில், அரைவாசிக்கும் அதிகமானோர் அங்கேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் கடுமையான பிரசன்னமானது, சத்தம், இராணுவ விபத்துகளிலிருந்து அங்கிருப்போரின் பங்களிக்கின்ற குற்றம் போன்ற பிரச்சினைகளால் உள்ளூர்வாசிகளை ஆத்திரப்படுத்துகின்றது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago