2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு நபரால் முழு நாட்டையே முடக்கிய ஜனாதிபதி

Ilango Bharathy   / 2022 மே 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவருக்குக்  கொரோனாத் தொற்று  ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்திய சம்பவம் வடகொரியாவில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை காலமும் ”வடகொரியாவில் கொரோனாத்  தொற்று ஏற்படவேயில்லை ”என அந்நாட்டு  அரசு கூறிவந்த நிலையில், தற்போது முதன்முறையாக ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது  உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதனைத் தொடர்ந்து ”கொரோனாவை ஒழிப்போம் ”என உறுதி பூண்டுள்ள வடகொரிய ஜனாதிகதி கிம் ஜொங் உன் ( Kim Jong-un) தேசிய அளவில் அவசரகால நிலையை பிறப்பித்து உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்  நாடு முழுவதும் ஊரடங்கு  அமுல் படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .