Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் 'ஓடிஸ்' சூறாவளி சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமானவை சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 'ஓடிஸ்' சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அதோடு சுமார் 273,000 வீடுகள், 600 உணவகங்கள் மற்றும் 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வணிக வளாகங்கள் இடிந்துள்ளன என்று அந்த நாட்டு அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago