Editorial / 2018 நவம்பர் 08 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமரூனின் பமேன்டா பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலிருந்து கடத்தப்பட்ட 79 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என, அந்நாட்டின் தொடர்பாடல் அமைச்சர் இஸ்ஸா பகரி சிரோமா தெரிவித்தார்.
பாடசாலையொன்றிலிருந்து, ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்த இவர்கள் தொடர்பான தேடுதல்களை, இராணுவம் ஆரம்பித்திருந்த நிலையிலேயே, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டனர், ஏதாவது விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பன தொடர்பான தகவல்களை, அமைச்சர் வழங்கியிருக்கவில்லை.
பெரும்பான்மையாக பிரெஞ்சு மொழி பேசும் கமரூனில், ஆங்கில மொழி பேசும் பிராந்தியத்திலேயே, இக்கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆங்கில மொழி பேசும் பிராந்தியங்கள், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டும் ஆயுததாரிகள், ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, முதலாவது மிகப்பெரிய கடத்தலாக, கடந்த திங்கட்கிழமை இம்மாணவர்கள் கடத்தப்பட்டமையே காணப்பட்டது.
12 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago