Freelancer / 2025 ஜனவரி 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் விளைவாக தற் போது, இஸ்ரேல் கட்டுமான நடவடிக்கையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலாளர்கள், கட்டுமான பணிக்கு சென்றுள்ளனர்.
அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு இலவச உணவு, தங்குமிடம் தவிர ரூ.1.5 இலட்சம் (இந்திய பெறுமதி) சம்பளமாக வழங்கப்படுகிறது.
பாதுகாப்புக்கும் முழு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது என்று, ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago