2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

கனடா பிரதமர் உக்ரேனுக்கு பயணம்

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களை நடத்தி வரும் உக்ரேனுக்கு கனடா, பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில், கடுமையான போர் உக்ரேனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த நாட்டு ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X