Ilango Bharathy / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில், கொரோனாத் தொற்றுப் பரவலினால் , 31 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 000 ஐ நெருங்குவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் கனரக வாகனங்களின் சாரதிகள் அனைவரும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளைச் செலுத்து வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்பூசி செலுத்தாத சாரதிகள் தனிமைப் படுத்தல் முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில்,சாரதிகளும் ,பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தலைநகர் ஒட்டாவாவிலும், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago