2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கமலாவின் கணவருக்கு முத்தம் கொடுத்த `ஜில் பைடன்`

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவருக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ‘ஜில் பைடன்‘  உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் கேபிடோல் நகரில் நேற்றிரவு நாடாளுமன்றக் கூட்டமொன்று  நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஜனாதிபதி  ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்,  துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப்புக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார்.

இதனைப் பார்த்த கூட்டத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள்  மற்றும் விடியோக்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X