Freelancer / 2023 நவம்பர் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் துருக்கிய சரக்குக் கப்பல் ஒன்று நாட்டின் கருங்கடல் கடற்கரையில் காணாமல் போயுள்ளதாகவும், அன்றிலிருந்து அதிகாரிகளால் கப்பலில் இருந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமேற்கு துருக்கியின் சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லியில் உள்ள ஒரு இடைவெளியை நோக்கி கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக துருக்கிய கொடியிடப்பட்ட காஃப்கமெட்லரின் கப்பலின் கேப்டன் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் மோசமான வானிலை, காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாகவும் அதனால், கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும். வானிலை சற்று தெளிவான பிறகு மீட்பு நடவடிக்கை தொடங்க குழுக்கள் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
11 minute ago
21 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
24 minute ago
29 minute ago