2025 மே 02, வெள்ளிக்கிழமை

கர்ப்பமானதை அறிந்த அன்றே பிரசவம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வசித்து வரும் ‘மோலி கில்பர்ட்‘ என்பவரே இவ்வாறு குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் எடை கடந்த 36 வாரங்களில் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் அச்சமடைந்த அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.  

அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

எனினும் கர்ப்ப கால அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படாத நிலையில் இச்செய்தியானது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்செய்தி அறிந்த அன்றே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X