2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

காருடன் விமானம் மோதியதில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மே 16 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திரக் கோளாரால் அவரசமாகத் தரையிறக்கிய விமானமொன்று காரொ ன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரிலேயே நேற்று முன்தினம் (14) இக்கோர விபத்து இடம்பெ ற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று 3 பயணிகளுடன் பயணித்த குறி த்த இலகு ரக விமானத்தின் என்ஜின், திடீரென பழுதான நிலையி ல் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரையிறக்கப்பட்டது.

இதன்போது எதிர் திசையில் வந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானத்தில் தீபற்றியது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் எனவும், இரு பயணிகள் மற்றும் காரில் வந்த குழந்தை கள் உட்பட 5 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X