Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு - காஷ்மிர் மாநிலத்தில், துணை இராணுவப் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக, சுமார் 150 காஷ்மிர் பிரிவினைவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 3 தசாப்தகாலத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாக அமைந்த காஷ்மிர் தற்கொலைத் தாக்குதலில், 44 பொலிஸார் கொல்லப்பட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, காஷ்மிரின் பல பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஓர் அங்கமாக, காஷ்மிரில் ஜெமாட்-ஈ-இஸ்லாமி என்ற குழுவினர் மீதான தேடுதல், வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்தது. அக்குழுவின் தலைவர்களும் அக்குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். இக்கைதுகள், நேற்று முன்தினம் வரை தொடர்ந்தன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டோரில், அக்குழுவின் பிராந்தியத் தலைவர் அப்துல் ஹமிட் ஃபயாஸும், ஜம்மு - காஷ்மிர் விடுதலை முன்னணி என்ற பிரபலமான காஷ்மிர் சுதந்திரக் குழுவின் தலைவரான மொஹமட் யசீன் மலிக்கும் உள்ளடங்குகின்றனர் என, இந்தியத் தகவல்கள் தெரிவித்தன.
காஷ்மிர் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிவினைக் கோரிக்கைகளுக்கெதிராக இந்தியாவில் பரவலான எதிர்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும், ஜம்மு - காஷ்மிரில், இக்கைதுகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை க்கெதிராக, காஷ்மிர் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டதோடு, முன்னணி அரசியல் தலைவர்கள், இந்நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். ஜம்மு - காஷ்மிரின் முன்னாள் முதலமைச்சரான மெஹ்பூபா முப்தி கருத்துத் தெரிவிக்கும் போது, இவ்வாறான நடவடிக்கைகள், நிலைமைகளை மேலும் மோசமாக்கும் என எச்சரித்ததோடு, “ஒரு நபரை உங்களால் சிறையிலடைக்க முடியும், ஆனால் அவரின் எண்ணங்களைச் சிறையிலடைக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago