Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் காஷ்மிரில் அந்நாட்டின் பொலிஸ் பிரிவொன்றின் மீது தாக்குதல் நடத்தி 44 பேரைக் கொன்ற, பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட ஆயுதக்குழுவுடன் சம்பந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் 23 பேரை, இந்திய அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
ஜெய்ஷ்-ஈ-மொஹமட் ஆயுதக்குழுவே இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்த நிலையில், அக்குழுவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என 23 பேரே கைதுசெய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவராண்மை அதிகாரிகள் விசாரணை செய்தனர். ஜெய்ஷ்-ஈ-மொஹமட் குழுவின் முக்கிய தளபதிகளைப் பற்றி அறிவதே தற்போதைய திட்டமாக உள்ளதென, இந்தியத் தகவல்கள் உள்ளனர்.
குறிப்பாக, ஜெய்ஷ் குழுவின் காஷ்மிர் பகுதிக்கான தளபதியான மொஹமட் உமைர் என்பவரே, இத்தாக்குதலின் பின்னால் உள்ளாரெனத் தெரிவிக்கும் அதிகாரிகள், அவரைத் தேடி, விசாரணைகளை நடத்தியுள்ளனர். அத்தாக்குதலை நடத்திய இளைஞரை, உமைரே தீவிரப்படுத்தி, தாக்குதலுக்கு ஊக்கப்படுத்தினாரெனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட ஏனையோர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாத போதிலும், இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், குறைந்தது 10 பேராவது, புல்வமா தாக்குதல் பற்றி மகிழ்ச்சியான அல்லது கொண்டாட்டமான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில், கர்நாடகாவைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியையொருவரும் உள்ளடங்குகிறார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago