Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒருவழிச் சகோதரர் கிம் ஜொங் நம்மைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்தோனேஷியப் பெண்ணொருவரான சிட்டி ஆயிஷியா, நேற்று (11) விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிட்டி ஆயிஷியாவுக்கெதிரான கொலைக் குற்றச்சாட்டை மலேஷிய அரச வழக்குத் தொடருநர்கள் கைவிட்டதைத் தொடர்ந்தே சிட்டி ஆயிஷியா விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மலேஷியத் தலைநகர் கோலா லம்பூரின் விமானநிலையத்தில் வைத்து, 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் கிம் ஜொங் நம் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒன்றரையாண்டுகளாக, வியட்நாமியப் பெண்ணொருவரான டோன் தி ஹியோங்குடன் விசாரணையை எதிர்கொண்டிருந்த சிட்டி ஆயிஷியா, காரில் இந்தோனேஷியத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், டோன் தி ஹியோங்கின் வாக்குமூலத்தை மாத்திரமே, கோலா லம்பூருக்கு வெளியேயுள்ள ஷா அலாம் உயர் நீதிமன்றம் நேற்று கேட்கவிருந்த நிலையில், அதிர்ச்சிகரமான முடிவாகவே சிட்டி ஆயிஷியா விடுவிக்கப்பட்டிருந்தார்.
அந்தவகையில், கருத்துத் தெரிவித்த சிட்டி ஆயிஷியா, தான் மகிழ்ச்சியாக உணருவதாகவும் இது நடக்குமென்று தனக்குத் தெரியாதென்றும், தான் இதை எதிர்பார்க்கவில்லையென்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த டோன் தி ஹியோங்கின் வழக்கறிஞர்கள், வழக்கை தள்ளுபடி செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலையை எப்போதும் மறுத்திருந்த குறித்த பெண்கள், வடகொரிய உளவாளிகளால் தாங்கள் தந்திரமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதாகக் கூறி மாட்டி விடப்பட்டதாகக் கூறியிருந்தனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago