Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடனான தனது சந்திப்பின்போது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான தடைகளை நீக்குமாறான அவரின் கோரிக்கைகளால், அணு ஒப்பந்தமொன்றிலிருந்து தான் விலகியதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று (28) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வியட்நாம் தலைநகர் ஹனோயில், நேற்றும் முன்தினமும் நேற்றும் நடைபெற்ற சந்திப்புகள், உறவுகளைக் கட்டமைப்பதிலும் முக்கிய பிரச்சினையான அணுவாயுதமளிப்பிலும் நல்ல முன்னேற்றத்தை அளித்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், எனினும் மோசமான ஒப்பந்தமொன்றுக்கு அவசரவசரமாகச் செல்லாதிருப்பது முக்கியமானது எனக் கூறியுள்ளார்.
பேச்சுக்கள் முன்னரே முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில், “இது முற்றிலும் தடைகளைப் பற்றியது. பிரதானமாக, அவர்கள் முழுதாக தடைகள் நீக்கப்பட வேண்டுமென விரும்பினர். நாங்கள் அதைச் செய்ய முடியாது” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடரான அணு, ஏவுகணைச் சோதனைகளை, 2017ஆம் ஆண்டு வடகொரியா மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வடகொரியா மீதான தடைகளை அதிகரித்திருந்தன.
ஜனாதிபதி ட்ரம்பும் தலைவர் கிம்மும், சந்திப்பு இடம்பெற்ற மெட்ரோபோல் ஹொட்டலிலிருந்து, திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாக மதிய உணவை அருந்துதலில் பங்கேற்காது வெளியேறியிருந்தனர். பின்னர், வியட்நாமிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு ட்ரம்ப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
இந்நிலையில், எந்தவொரு ஒப்பந்தமும் இணங்கப்படாதது குறித்து வருத்தமடைவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதில் அவசரப்படப்போவதில்லை என ஜனாதிபதி ட்ரம்ப் முன்னரே தெரிவித்திருந்தபோதும், பேச்சுக்களின் முடிவில் இணைந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வொன்றை வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்திருந்த நிலையில், மதிய உணவு போன்று குறித்த நிகழ்வும் நடைபெற்றிருக்கவில்லை.
அந்தவகையில், ஜனாதிபதி ட்ரம்பும் தலைவர் கிம்மும் மீண்டும் சந்திப்பதற்கான சமிக்ஞை இல்லாதபோதும், எதிர்காலத்தில் சந்திப்பதை இரண்டு அணிகளும் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளைக், யொங்பயோனிலுள்ள வடகொரியாவின் பிரதான அணு சக்தி நிலையத்தை மூடுவது குறித்து தானும் தலைவர் கிம்மும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதைச் செய்ய தலைவர் கிம் தயாராகவிருந்தபோதும், முதலில் தடைகளிலிருந்து மீட்சியை விரும்பியிருந்தார்.
வேறு நிலையங்களைப் பற்றியும் தான் கூறியதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அவற்றை ஐக்கிய அமெரிக்கர்கள் அறிந்திருந்தார்கள் என வடகொரியர்கள் ஆச்சரியப்பட்டதுடன் அதில் அவர்கள் இணங்கியிருக்கவில்லை.
இதுதவிர, வடகொரியாவின் நிலையங்கள் சிலவற்றை ஐக்கிய அமெரிக்கா சோதிக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அதனை விவரமாகக் குறிப்பிட்டிருக்கவில்லை.
இந்நிலையில், ஆரம்பத்தில், தனது அணுக்குண்டுகளைக் கைவிடத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்த தலைவர் கிம், தான் அதைச் செய்யத் தயாராகவில்லா விடால், தான் இங்கு இருக்கமாட்டேன் என ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கும்போது மொழிபெயர்ப்பாளர்களினூடு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago