2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது மனைவிக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தையொன்று இறந்து விட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளர்.

ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்  ”தனது மனைவி மீண்டும் கருத்தரித்துள்ளார் ” என ரொனால்டோ தெரிவித்திருந்தார். அத்துடன் ”தாம் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாகவும்”  அவர்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு அண்மையில் இரட்டைக்குழந்தைகள் பிறந்த நிலையில் அதில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரொனால்டோ நேற்று முன்தினம் (18)  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறேன். 

எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களி கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 

இந்த இழப்பில் நாங்கள் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், இந்த கடினமான நேரத்தில் தனிமையை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மகனே, நீ எங்கள் தேவதை. நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X