2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

குடியேற்றம் தொடர்பான ஐ.நாவின் திட்டத்தை நிராகரித்தது ஆஸி

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடப் போவதில்லை என, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசன், நேற்று (21) அறிவித்தார். குடியேற்றம் தொடர்பாகத் தாங்கள் கொண்டுள்ள கடும்போக்குக் கொள்கையை அது பலவீனமாக்கும் என்பதாலேயே, அத்திட்டத்தை ஏற்கப் போவதில்லையென அவர் தெரிவித்தார்.

குடியேற்றம் தொடர்பாக பூகோள ஒப்பந்தமொன்று, ஐ.நாவால் முன்வைக்கப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடும் நாடுகள், குடியேற்றவாசிகளாக விரும்புபவர்களை, தன்னிச்சையாகத் தடுத்து வைக்க வேண்டாமெனவும், தடுத்து வைத்தலென்பது, ஏனைய முயற்சிகள் சாத்தியப்படாத நிலையில், இறுதி முயற்சியாகவே மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்தது.

ஆனால், ஐக்கிய அமெரிக்கா, இஸ்‌ரேல், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சில ஆகியன, இவ்வொப்பந்தத்தை ஏற்கெனவே நிராகரித்திருந்த நிலையில், அந்நாடுகளின் பட்டியலில், அவுஸ்திரேலியாவும் இப்போது இணைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம், அவுஸ்திரேலியாவின் நலன்களைப் பாதிக்குமெனக் குறிப்பிட்ட அவர், “அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வருபவர்களையும், சரியான முறையில் வருபவர்களையும் அவ்வொப்பந்தம் வேறுபடுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

உலகில், கடுமையான குடியேற்ற விதிகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா கருதப்படுவதுடன், படகுகளில் தமது நாட்டை நோக்கி வருவோரை, அவுஸ்திரேலியாவுக்கு வெளியே, வேறு தீவு நாடுகளில் தடுத்து வைப்பது வழக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X