2025 மே 19, திங்கட்கிழமை

குண்டர்களால் அவசரகால நிலை நீடிப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக குண்டர்களின் அட்டகாசங்கள் எல் சால்வடோர்   (El Salvador)  நாட்டில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மார்ச்  மாதம்  26 ஆம் திகதி, ஒரே  நாளில் 62 பேர் குண்டர்களால் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் குண்டர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி நயிப் புகேலே  (Nayib Bukele)தலைமையிலான அரசு, தீவிரம் காட்டிவருவதாகவும்,  இதன் ஒருபகுதியாக  கடந்த மாதம் விதிக்கப்பட்டிருந்த அவசர கால நிலையை  நீட்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  இதுவரை சுமார் 16, 000க்கும் மேற்பட்ட குண்டர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் ஒன்று கூடுதல் மற்றும்  தகவல் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசு   பறிப்பதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X