2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குளியலறையிலிருந்து அலறிய பெண்; பொலிஸாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு வடகிழக்கில் உள்ள விண்டர்தூர் (Winterthur) நகரைச் சேர்ந்த 50 பெண்ணொருவர் அண்மையில் தனது குளியலறையில் இருந்து அலறியுள்ளார்.

இந்நிலையில் அவரது அலறலைக் கேட்ட அயலவர்கள் இது குறித்து பொலிஸாருக்குத்  தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அப் பெண்ணின் கதவை உடை உள்ளே சென்று பார்த்த போது அப்பெண்ணின் கைவிரல் குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் மாட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்சியடைந்துள்ளனர்.

 இதையடுத்து பொலிஸார் அப் பெண்ணின் விரலை வெளியேற்ற முயற்சி எடுத்த போதும் அம்  முயற்சி தோல்வியை சந்தித்ததால் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்  அப்  பெண்ணின் விரலை பத்திரமாக விடுவித்துள்ளனர்.

 இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் வருகை தந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X