2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குளிரால் 70 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 70,000 கால்நடைகளும் குளிரில் உறைந்து  உயிரிழந்துள்ளன எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களான கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது. குறிப்பாக  கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை ‘-21‘ பாகை செல்லியஸ் ஆகக் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் 70 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்தனர் எனவும்  குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இப்பனிப்பொழிவானது மேலும் ஒரு வாரம் வரை  நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X