2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குளிர்கால ஒலிம்பிக்குக்கு எதிராக தாய்வானில் போராட்டம்

Freelancer   / 2022 ஜனவரி 10 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீனா தயாராகி வரும் நிலையில், திபெத் மற்றும் தாய்வானுக்கான மனித உரிமைகள் வலையமைப்பின் பல அதிகாரிகளும் உறுப்பினர்களும் தாய்வானிலுள்ள சீன வங்கிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனாவில் மத மற்றும் சிறுபான்மை இனத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்ததாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில், எதிர்ப்பாளர்களுடன் தாய்பேய் நகர முதல்வர் ஃப்ரோகி சியு மற்றும் தய்வான் மனித உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷி யி சியாங் ஆகியோரும் ஹொங்கொங் மற்றும் உய்குர் அதிருப்தி குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

திபெத் மற்றும் தாய்வானுக்கான மனித உரிமைகள் வலையமைப்பின்  தலைவரான தாஷி செரிங், தமது அமைப்பு ஜனவரி 19ஆம் திகதின்று தாய்வான் பாராளுமன்றத்தின் சட்டமன்ற அமைப்பைச் சுற்றி வளைக்க விரும்புவதாக அறிவித்தார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் எச்சரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதற்கான போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தாஷி செரிங் தெரிவித்தார்.

குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதற்கான அனைத்துக் கட்சித் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக தாய்வானிலுள்ள சட்டமியற்றுபவர்களுக்கு அழுத்தம் கொடுக்க திபெத் மற்றும் தாய்வானுக்கான மனித உரிமைகள் வலையமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் ஏஎன்ஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் குற்றம் சாட்டியுள்ள மனித உரிமைகள் வலையமைப்பு, பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறும் சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .