Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்தியத் தலைநகரான கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தில், ரயில் இயந்திரமொன்று மோதி, நேற்று முன்தினம் எரிந்ததில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கைத்தடையை இழுக்காமல், இன்னொரு ஓட்டுநருடன் கதைப்பதற்காக ரயிலை விட்டு ஓட்டுநர் இறங்கிய நிலையிலேயே, ரயில் வேகமெத்து கொங்கிறீட் தளமொன்றை மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையொன்று இனங்காட்டுவதாக எகிப்தின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த ரயில் நிலையத்தின் பாதுகாப்புக் கமெராவின் காணொளியில், ஆறாவது தடத்தில் வந்த ரயில் நிறுத்தப்படாமல் மோதி, தீப்பிழம்பாக மோதி வெடிப்பது பதிவாகியுள்ளது. அந்தவகையில், தீ பரவியபோது பொதிகளைக் காவிய பயணிகள், தங்களது உயிரைக் காத்துக் கொள்ள ஓடியதாகவும் சில மக்கள் நெருப்புடன் ஓடியதாக, சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரயிலின் ஓட்டுநகர் கைது செய்யப்பட்டுள்ளதாக எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ள நிலையில், மீட்கப்பட்ட 20 சடலங்களில், பெரும்பாலனவை மோசமாக எரிந்திருப்பதால், அதிகாரிகளால் அடையாளங்காண முடியவில்லை என சுகாதார அமைச்சர் ஹலா ஸயேட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரயிலின் டீசல் இயந்திரம் வெடித்தாகத் தெரிவித்த போக்குவரத்து அமைச்ச்சர் ஹிஷாம் அரபாத், நேற்று முன்தினத்தின் பிற்பகுதியில் இராஜினாமா செய்திருந்தார்.
இதேவேளை, ரயில் தளத்தை வந்தடைந்தபோது, ரயில் இயந்திரத்திலிருந்த நபரொருவர், தடைகள் இல்லை, தடைகள் இல்ல்லை எனக் கத்தியவாறு, ரயில் இயந்திரத்துக்கு வெளியே குதித்ததாக, சம்பவத்தைக் கண்ணுற்ற இப்ராஹிம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
மிகவும் பழமையான, பாரிய ரயில் வலையமைப்புகளை பிராந்தியத்தில் கொண்டிருக்கின்ற ஒரு நாடான எகிப்தில், விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையானதாக உள்ளது
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago