2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கைதிகள் உயிருடன் உள்ளபோதே அறுத்தெடுக்கப்படும் இதயம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில்  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் இதயம், அவர்கள் உயிருடன் உள்ளபோதே வெட்டி எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியானது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்விலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வில்” சீனாவின் நீதித் துறையின் சார்பில் மருத்துவர்களே கைதிகளது இதயத்தை நீக்கி மரண தண்டனை நிறைவேற்றுவதாகவும், மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் இதயத்தை  அவர்கள் உயிருடன் உள்ளபோதே மருத்துவர்கள் வெட்டி எடுத்துவிடுவதாகவும், பின்னர் அவற்றை தானமாக வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இதுவரை சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் 71 பேருக்கு இதயம் அகற்றப்பட்ட நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X