Freelancer / 2025 மே 12 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு மாகாணமான கிவுவில் வியாழக்கிழமை (8) இரவு முதல் வெள்ளிக்கிழமை (9) வரை மழை பெய்தது.
இதன் காரணமாக, நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உட்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அங்கிருந்த பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் மீட்பு படையினருக்கு உதவியாக உள்ளூர் மக்களும் இணைந்தனர். அவர்கள் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
எனினும் இதுவரை நடைபெற்ற மீட்பு பணியில் பலர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனவும் இதில் 28 பேர் காயமடைந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் பிராந்திய நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதனையடுத்து பிராந்திய நிர்வாகி சம்மி கலோஞ்சி கூறுகையில், இந்த வெள்ளப்பெருக்கு குறைந்தது 104 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் கூறினார்.
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago