2025 மே 17, சனிக்கிழமை

கொரோனாத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தவர் கொடூரக் கொலை

Ilango Bharathy   / 2023 மார்ச் 05 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனாத் தொற்றுப் பரவலைக்  கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்யாவினால்  கடந்த 2020 ஆம் ஆண்டு ‘ஸ்புட்னிக்-வி‘ (Sputnik V) என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இத்தடுப்பூசியைக்  கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆண்ட்ரே போடிகோவ் (Andrey Botikov)  என்பவர்  கடந்த 2 ஆம் திகதி தனது வீட்டில் வைத்து  மர்ம நபரால் ‘பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்‘ கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

47 வயதான போடிகோவ், ‘கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில்‘  மூத்த விஞ்ஞானியாகப்  பணியாற்றி வந்தவர் என்பதும்,  கடந்த 2021 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானிக்கான விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .