2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கொலம்பிய எல்லைக்குச் செல்கிறார் குவைடோ

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தின் தடுப்புக்கு மீறி, மனிதாபிமான உதவியைக் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுப்பதற்காக, கொலம்பியாவுடனான எல்லைக்குச் செல்ல, தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ திட்டமிட்டுள்ளதாக அவரது ஊடக அணி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவால் அனுப்பப்பட்டு, கொலம்பியாவின் குகுட்டாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவு, மருந்துகளை வெனிசுவேலாவுக்குள் கொண்டுவருவதற்கான காலக்கெடுவாக நாளை சனிக்கிழமையை குவைடோ நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, எதிர்க்கட்சிகளான கட்டுப்படுத்தப்படும் தேசிய சபையின் சக உறுப்பினர்களுடன், வாகனத் தொடரணியொன்றில் எல்லைக்கு குவைடோ செல்லவுள்ளார் என அவரது ஊடக அலுவலகம் கூறியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் இராணுவத்துக்கான வெனிசுவேலாவின் உப தலைவர் கேணல் பெட்ரோ சிறினோஸ், சமூக வலைத்தளதில் வெளியிடப்பட்ட காணொளியொன்றில், வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக குவைடோவை தான் அங்கிகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குவைடோவால் கொஸ்டா றிக்காவுக்காக நியமிக்கப்பட்ட தூதுவர் மரியா பரியா, கொஸ்டா றிக்காவிலுள்ள வெனிசுவேலா தூதரகத்தின் கட்டுப்பாட்டை நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளார்.

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரீவின் பிரதிநிதிகள், கொஸ்டா றிக்காவை விட்டு வெளியேறுவதற்கு 60 நாட்களை கொஸ்டா றிக்கா அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியிருந்த நிலையில், மரியா பரியாவை வெனிசுவேலாவின் சட்டரீதியான தூதுவராக அங்கிகரித்தபோதும், காலக்கெடு முடிவதற்குள் தூதரகத்தைக் கைப்பற்றியதை கொஸ்டா றிக்காவின் வெளிநாட்டமைச்சு விமர்சித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X