2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோடீஸ்வரராக்கிய ‘பால்’

Ilango Bharathy   / 2022 ஜனவரி 03 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பால் வாங்க கடைக்குச்  சென்றவர் கோடீஸ்வரராக வீடு திரும்பிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின்  வர்ஜினியா மாநிலத்திலுள்ள வடக்கு செஸ்டர்ஃபீல்டை (North Chesterfield) பகுதியைச் சேர்ந்தவர்  டென்னிஸ் வில்லோபி (Dennis Willoughby).

இவர் அண்மையில் தனது  பிள்ளைகளுக்கு பால் வாங்குவதற்காகக்  கடைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது அங்கு  எதேச்சையாக அதிஷ்ட இலாபச் சீட்டு ஒன்று விற்பனைக்கு இருப்பதைப் பார்த்த அவர்,  அங்கு சென்று ஒரு சீட்டை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த அதிஷ்ட இலாபச் சீட்டுக்கு  அவருக்கு, 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அதிஷ்ட லாபச் சீட்டில்  இத் தொகையை வென்ற இரண்டாவது நபராக டென்னிஸ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X