Freelancer / 2026 ஜனவரி 15 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் இன்றியமையாதது என்றும், தான் உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்புத் திட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தாம் கட்டி எழுப்பி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பிற்கு கிரீன்லாந்து நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டள்ளார்.
மேலும், நாம் கிரீன்லாந்தை எடுக்காவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதனைக் கைப்பற்றிவிடும். அது ஒருபோதும் நடக்காது என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் பெரும் இராணுவ பலம் இன்றி நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாக இருக்க முடியாது என்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது நேட்டோ இன்னும் வலிமையானதாக மாறும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதுஎனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் கட்டியெழுப்பிய இராணுவ பலத்தை இப்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a)
21 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
9 hours ago