2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிக்குன்குனியா வைரஸ் தொடர்பில் WHO எச்சரிக்கை

S.Renuka   / 2025 ஜூலை 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் காரணமாக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, மற்றும் நீண்டகால இயலாமை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம்  வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிக்குன்குனியா பரவல் தொடருமானால், அது உலகளாவிய சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் பரவத் ஆரம்பித்த சிக்குன்குனியா வைரஸ், கடந்த காலத்தில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்   மீண்டும் அதே அளவிலான அபாயம் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் கூறுகையில்,

சுமார் 56 நாடுகளில், 119 பில்லியன் மக்கள் சிக்குன்குனியா தொற்று ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் சிக்குன் குனியா பரவத்  ஆரம்பித்துள்ளது.  

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் அதிகளவான பாதிப்புக்களும் பதிவாகியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X