Editorial / 2018 நவம்பர் 20 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, பெண்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்ற நிலையில், 68 பேரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் நேற்று (19) தெரிவித்தனர்.
கேரளாவில் அமைந்துள்ள இக்கோவிலில், மாதவிடாய் வயது எனக் கோவில் கருதிய, 10 வயது முதல் 50 வயதுவரையான பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், உச்சநீதிமன்றத்தால் அத்தடை நீக்கப்பட்டது.
அத்தடை நீக்கப்படும் உத்தரவு, இவ்வாண்டு செப்டெம்பரில் வழங்கப்பட்டது. ஆனால், பெண்கள் உட்செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்துத் தேசியவாதிகளால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீளத் திறக்கப்பட்ட கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கான எதிர்ப்புகள் தொடர்கின்றன. இதன்போதே, 68 பேரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட பலர், ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் கைதுசெய்யப்பட்டனர் எனவும், கோவிலுக்கு அண்மையாக அவர்கள் நின்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாரத்தில் சபரிமலைக்குள் செல்வதற்கு, சுமார் 700 பெண்கள் இதுவரை பதிவுசெய்துள்ளனர். ஆனால், சபரிமலைக்குச் செல்வதற்காக, கேரளாவின் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற பெண் செயற்பாட்டாளர்கள், விமான நிலையத்துக்கு வெளியே செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.
12 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago