2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சப்பாத்தி சுடும் பில் கேட்ஸ்

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து சாப்பத்தி செய்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவி வருகிறது.  

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் இளம் வயதிலேயே பில்லியனர் ஆன பெருமைக்கு உரியவர் பில் கேட்ஸ். சமீபத்தில் பில் கேட்ஸ் அவருடைய மனைவி உடனான விவாகரத்து, எலான் மஸ்க் உடன் கருந்து வேறுபாடு ஆகியவற்றின் மூலம் சோகத்தில் உள்ளானார்.

இதை அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றும் வகையில் பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் கர்ப்பமாக இருக்கும் செய்தி மூலம் தான் தாத்தாவாகப் போகும் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்தை பில் கேட்ஸ்-ன் 2022 ஆம் ஆண்டின் முடிவில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் சாப்பத்தியை பில் கேட்ஸ் ஆரம்பம் முதல் தயாரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .