2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சம்பியனான எஸ்.டி.ஆர் கழகம்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட மென்பந்து கிரிக்கெட் தொடரில் எஸ்.டி.ஆர் கழகம் சம்பியனானது.

சம்மாந்துறை புதிய பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரில், தனது குழுவில் மோதிய சகல அணிகளையும் வீழ்த்தி எஸ்.டி.ஆர் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. மறுமுனையில் தனது குழுவில் போட்டியிட்ட சகல அணியினரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற சம்மாந்துறை நியூசன் அணி இறுதி போட்டியில் எஸ்.டி.ஆருடன் மோதியது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எஸ்.டி.ஆர், நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதற்கமைய பதிலுக்கு 64 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியூசன் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 52 ஓட்டங்கை மாத்திரம் பெற்றுக் கொண்டு 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக எஸ்.டி.ஆரின் சாஜித், தொடரின் நாயகனாக நியூசன் அணியின் வீரர் சாகிர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்விறுதிப் போட்டியில், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அஃப்னான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X