Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூரில் கட்டோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க இலங்கையரான ஈஷான் தாரக கூட்டகே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் மாலை 4.42 மணி வரையான காலப்பகுதியில், 88 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அமைந்துள்ள Holiday Inn Express Katong ஹோட்டலில் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செப்டம்பர் 18ம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என சொல்லப்பட்டுள்ளது.
குறித்த, ஹோட்டல் அறையில் வெட்டுக் காயத்துடன் அசையாமல் கிடந்தார் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்று ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago