2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சிம்பாப்வே பஸ் விபத்தில் 47 பேர் பலி

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயின் தென்கிழக்குப் பிராந்தியத்தில், இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தால், குறைந்தது 47 பேர் பலியாகினர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு நகரமான முத்தரேயிலிருந்து தலைநகர் ஹராரேயை நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றும், அதற்கு எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த இன்னொரு பஸ்ஸும், றுஸாப்பே என்ற நகரத்தில் வைத்து மோதிக் கொண்டன.

47 பேர் உயிரிழந்தனர் என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், இன்னும் சிலர் காயமடைந்தனர் எனவும் தெரிவித்தனர்.

இவ்விபத்தை உறுதிப்படுத்திய சிம்பாப்வே போக்குவரத்து அமைச்சர், விபத்துக் குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X