2025 மே 20, செவ்வாய்க்கிழமை

` சிறுவர் ஆபாசப்படங்களின் விநியோகம்` அதிகரிப்பு; அதிர்ச்சியில் பெற்றோர்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் ‘சிறுவர் ஆபாச படங்களின் விநியோகமும் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டுப்  பெற்றோர் இடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில்  கடந்த 2020 ஆம் ஆண்டை விட  2021 ஆம் ஆண்டில் 108.8 % சிறுவர்களின் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜேர்மனியின் உட்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் ” பயங்கரமாக அதிகரித்திருக்கும் சிறுவர் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள தனக்கு ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜேர்மனியில் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் குறிப்பாக  வன்முறை, குற்றங்கள் 6.8 சதவீதம் குறைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X