2025 மே 17, சனிக்கிழமை

சீன ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வு!

J.A. George   / 2023 மார்ச் 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்(வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14ஆவது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்துள்ளனர். 

ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை. மேலும், சீன இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கிறார்.

மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்தவர் என்கின்ற பெருமையை பெறுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .