2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கழிப்பறையால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில், 2.400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறையைத்  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஷான்சி மாகாணத்திலுள்ள, யுயாங் தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே இக் கழிவறையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கழிவறையைக்  கண்டு தாம் ஆச்சரியம் அடைந்ததாகவும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

"சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ஃப்ளஷ் கழிப்பறை இதுவாகும்" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கழிப்பறையில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பழங்கால மக்களின் உணவு முறைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களையும் கண்டறியலாம் எனக்  கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .