Freelancer / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, நேபாளத்துக்கும் சீனாவுக்குமான எல்லையில் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், நேபாள வர்த்தகர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சீனாவுடனான நேபாளத்தின் வர்த்தகம், குறிப்பாக இறக்குமதியானது அதிகரித்து வரும் சரக்கு விலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் இதுவே உலகளாவிய போக்காகக் காணப்படுகிறது.
நேபாளம் உட்பட பல நாடுகள் உலகளவில் சரக்கு செலவுகள் அதிகரித்து வருவதால் பணவீக்க அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.
கொரோனா தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பீஜிங் தனது எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் வர்த்தகம் இன்னும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .