Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷ்யாவும் வட வியட்னாமுக்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமுக்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக ஆதரவு வழங்கின.
இப்போர், சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் தீவிரமாக பங்கேற்ற அமெரிக்க இராணுவத்தால் வியட்னாம் நாட்டு கொரில்லா போர்முறையினை சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து, 1973 ஆண்டு அமெரிக்க படை தெற்கு வியட்னாமை விட்டு வெளியேறியது.
இந்நிலையில், ஜி20 18-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வியட்னாமுடன் ஒருங்கிணைந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். வியட்னாம் போர் முடிந்து சுமார் 50 வருட காலம் கழித்து, அந்நாட்டுடன் முக்கிய இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நீண்டகால நட்பு நாடான வியட்னாம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் புரிவது சீனாவை அமெரிக்கா தனிமைப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இதனை மறுத்த ஜோ பைடன், "பனிப்போர் காலத்தை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒரு நிலையான, வளரக்கூடிய பொருளாதார தளத்தை அமைத்து கொள்வதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம். சர்வதேச சமூகத்தில் வியட்னாம் ஒரு நட்பான, நம்பிக்கையான மற்றும் பொறுப்புள்ள கூட்டாளி. சீனாவை கட்டுப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.
33 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
49 minute ago