Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தரவுகளை வெளியிடுவதற்குப் பதிலாக தவறுதலாக ஆபாச வீடியோவொன்றினை சுகாதார அமைச்சு வெளியிட்ட சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் கியூபேர்க் நகரிலுள்ள சுகாதார அமைச்சானது தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் குறித்த டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட கொரோனாத் தரவு விபரங்களை பகிர்ந்துள்ள போது அதில் தவறுதலாக ஆபாச வீடியோவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், இது குறித்த தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குறித்த டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில் , பலரும் குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரை மணி நேரத்துக்குப் பின்னர் குறித்த வீடியோவை நீக்கிய சுகாதார அமைச்சானது இது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு ‘பொருத்தமற்ற வீடியோவினை சமூக ஊடகங்களில் வெளியிட்டமைக்காக மன்னிப்புக் கேட்பதாகவும்,இது குறித்து மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாகவும்’ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சகத்தின் சமூக ஊடக கணக்குகளை கையாளும் ஊழியர்களில் சிலர் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால், இத்தவறு இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .