Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவில் கடந்த வாரயிறுதியில் சுனாமியை ஏற்படுத்திய அனக் கிரகட்டோவா எரிமலைக்கான ஆபத்து மட்டத்தை இந்தோனேஷியா இன்று உயர்த்தியுள்ளது.
அனக் கிரகட்டோவைச் சுற்றிப் போவதற்கு முன்னர் தடையிலிருந்த இரண்டு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தை தற்போது ஐந்து கிலோமீற்றர்களாக அதிகரித்துள்ள அதிகாரிகள், கரைகளிலிருந்து தள்ளியிருக்குமாறு எச்சரித்துமுள்ளனர்.
எரிமலையிலிருந்து வானை நோக்கி சாம்பர் பிளம்புகள் செல்வதுடன், கடலினுள்ளே சூடான வாயும் வேறும் எரியும் பதார்த்தங்களும் செல்லுகின்ற நிலையில் அப்பகுதியிலுள்ள படகுகள் கொந்தளிப்புக் கடலை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து அதிகரித்துள்ளது.
இரண்டாவது ஆபத்தான எச்சரிக்கையான உயர் எச்சரிக்கையாக எரிமலையின் நிலையை அதிகாரிகள் மாற்றியுள்ளநிலையில், குறித்த பகுதிகளிலிருந்து விமானங்களை விமான அதிகாரிகள் அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எரிமலை குமுறும் வடிவத்தில் மாற்றமொன்று ஏற்பட்டதாலேயே நேற்றுக் காலையிலிருந்து எரிமலையின் எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளதாக அதைக் கண்காணிக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மோசமான வானிலை மழை எச்சரிக்கைக்கு மத்தியில் ஜாவாத் தீவின் மேற்குக் கரையிலுள்ள ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கு செல்ல இந்தோனேஷிய மீட்பு அணிகள் நேற்று தடுமாறியிருந்தன.
கரையோரமாகவுள்ள மீனவக் கிராமங்களை கடும் மழை தாக்கியதில், வீதிகள் சேறுமயமாகியுள்ள நிலையில் பாரிய உபகரணங்களையும் உதவிகளையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனத் தொடரணிகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், சுனாமியில் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 430ஆக உள்ளதோடு, குறைந்தது 159 பேரைக் காணவில்லையென்ற நிலையில், ஏறத்தாழ 1,500 பேர் காயமடைந்துள்ளதுடன், 21,000க்கும் மேற்பட்டோர் உயர் நிலப்பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் நான்காம் திகதி வரைக்கும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உதவிகளை வழங்குவது இலகுவாக இருக்குமென அதிகாரிகள் நம்புவதாக தேசிய இடர் முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்றொஹொ தெரிவித்துள்ளார்.
5 minute ago
8 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 hours ago
05 Nov 2025