2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுற்றுச்சூழல் போர்வையில் திபெத்தியர்களை இடம்பெயர்க்கும் சீனா

Freelancer   / 2022 மே 16 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ், திபெத்தில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் நாடோடிகளை ஒடுக்கி வருகிறது என, ஊடக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

உலகின் மேற்கூரையில் உருவாகும் ஏராளமான ஆறுகளுக்கு அணை கட்டும் இந்த நடவடிக்கைகளை 'கிறீன்வோஷிங்' என்று அழைக்கப்படுகிறது

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜே வெஸ்டர்வெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட கிறீன்வோஷிங் என்ற சொல், "செயல்பாடொன்றை உண்மையில் இருப்பதை விட சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றும் நடைமுறை" என்று அர்த்தப்படுவதாக குளோபல் ஓடர் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது, நாடோடி மக்களின் இடமாற்றம் மற்றும் குடியேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அறியாமை, பின்தங்கிய மற்றும் பகுத்தறிவற்றவர்கள் என்று அதிகாரிகளால் பார்க்கப்படும் அவர்களின் அதிகளவான மேய்ச்சல் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

திபெத்திய நாடோடிகளால் நடைமுறைப்படுத்தப்படும் பாரம்பரிய மேய்ச்சல், திபெத்திய மலைப்பகுதிகளுக்கு முக்கியமானது; கோடை மேய்ச்சலில் இருந்து குளிர்கால மேய்ச்சலுக்கு சுழற்சி முறையில் தங்கள் மந்தைகளை நகர்த்தும் அவர்களின் நுட்பம் அதிகப்படியான மேய்ச்சலைத் தவிர்க்க உதவுகிறது. 

இது புல்வெளிகளைப் புதுப்பிக்கிறது, வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துகிறது மற்றும் திபெத்திய பீடபூமியைத் தக்கவைக்க உதவுகிறது என்று அறிக்கை மேலும் கூறியது.

திபெத்தில் சீனா பின்பற்றி வரும் மற்றொரு பசுமை கொள்கை, நிலக்கரி மீது நாடு சார்ந்திருப்பதைக் குறைக்க, பீடபூமியில் பல அணைகளைக் கட்டுவதாகும். 

இருப்பினும்,  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மெகா திட்டங்களுக்கான செலவு, தமது வாழ்விடங்களை சீர்குலைத்தல் மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற வடிவங்களில் உள்ளூர் திபெத்தியர்களால் செலுத்தப்படுகிறது, .

உதாரணமாக, கான்சி திபெத்திய தன்னாட்சி மாகாணத்தில் அமைந்துள்ள லியாங்ஹெகோ நீர்மின் நிலையமானது, மூல நிலக்கரி நுகர்வு 13.3 மில்லியன் தொன்கள் மற்றும் காபனீரொட்சைட் உமிழ்வை வருடத்துக்கு 21.3 மில்லியன் தொன்கள் குறைக்க உதவும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பசுமை ஆற்றல் என்ற திரைக்கு அடியில், நான்கு மாவட்டங்களில் உள்ள சுமார் 6,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் லியாங்ஹெகோ அணை 2023 ஆம் ஆண்டில் முழுமையாக முடிக்கப்பட்டவுடன்,  திபெத்தியர்களின் மூதாதையர் வீடுகள், பௌத்த மடங்கள் மற்றும் புனித மலைகளை மூழ்கடிக்கும் என்று கூறப்படுகிறது.

திபெத்தின் பரந்த பகுதிகளை தேசிய பூங்காக்களாக மாற்றும் கொள்கையையும் சீனா பின்பற்றுகிறது, இது இன்னும் அதிகமான திபெத்தியர்களை அவர்களின் மூதாதையர் நிலங்களில் இருந்து அகற்றுவதற்கான சாக்குப்போக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
 
திபெத்திய பீடபூமியில் அதன் சுற்றுச்சூழலை அழித்ததற்கு சீனாவை பொறுப்பேற்க உலகம் ஒன்று சேராத வரை, உலகின் மூன்றாம் துருவத்தில் அது செய்யும் சுற்றுச்சூழல் குற்றங்களை கிறீன்வோஷிங் என்ற சொல்லாட்சி தொடர்ந்து கழுவிக்கொண்டே இருக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X