Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 27 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை உருவாக்கும் பயங்கர ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா-தென்கொரியா இடையேயான மோதலில் தென்கொரியாவின் பக்கம் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை உள்ளன.
எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன் தொடர்ச்சியாக பல பயங்கர ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கொரிய பிராந்தியத்தில் நடத்திய கூட்டு இராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரிய தற்போது அதிநவீன ஆயுதம் ஒன்றை வெற்றிகரமாக சோதித்தாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, ”கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் ஆயுதம் ஒன்றை ட்ரோன் மூலம் செலுத்தி 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் அதை வெடிக்க வைத்துள்ளோம். இதன் மூலம் செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தினோம்” என வடகொரிய தெரிவித்துள்ளது.
மேலும் இச் சோதனை தலைவர் ‘கிம் ஜொங் யுன்‘ முன்னிலையில் நடைபெற்றதாகவும், இது வெற்றி பெற்றதால் அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு வடகொரிய நிச்சயம் தக்க விலையை கொடுக்க வேண்டி வரும் என தென்கொரிய ஜனாதிபதி ‘யுன் சுக் இயோல்‘ தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago