2025 மே 16, வெள்ளிக்கிழமை

செல்ஃபி எடுத்தால் ரூ. 96,000 அபராதம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 செல்ஃபி எடுத்தால் இலங்கை மதிப்பில் 96,000 ரூபாய்  அபராதம் விதிக்கப்படுமென இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

இத்தாலியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான போர்ட்டொஃபினோ என்கிற நகரத்திலேயே இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் கூடுவதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டே  இப்புதிய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  அந்நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை மீறி யாரேனும் செல்ஃபி எடுத்தால், 275 யூரோக்கள், அதாவது இலங்கை மதிப்பில் 96,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதியானது, வரும் ஒக்டோபர் மாதம் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நகரில் மாலை 6 மணிக்கு மேல் செல்ஃபி எடுத்துகொள்ள எவ்வித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .