Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், இன்று மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் போலீஸாரை திக்குமுக்காட வைத்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல பொலிஸ் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை நடத்தியுள்ளனர். இதில், இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4-ம் திகதி முதலே நேபாளத்தில் சமூக வலைதள தடை அமலில் உள்ளது. ஆனால், அதற்கெதிராக அமைதிவழி போராட்டங்கள் பல நடந்தும் கூட அரசு சற்றும் இரக்கம் காட்டாத நிலையில்தான் இன்று போராட்டம் இவ்வளவு பெரிதாக வெடித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகின்றனர்.
நேபாள தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்வி சுபா குருங் கூறுகையில், “பல்வேறு சமூக வலைதளங்களுக்கும் வரி விதிப்பு பற்றி பலமுறை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் அரசு வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்கள் பதிவு செய்துகொண்டு சில வரி விதிப்புகளுக்கு உட்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்று தெரிவித்துவிட்டது. இருப்பினும் அவர்கள் உடன்படாததால் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது நேபாளத்தில் Viber, TikTok, Wetalk, Nimbuzz போன்ற சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்த முடிகிறது. இவை பதிவு செய்துவிட்டன. டெலிகிராம் பதிவு செய்யும் நடவடிக்கையில் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக், மெட்டா, வாட்ஸ் அப் எல்லாம் பதிவு செய்வதற்கே இன்னும் முன்வரவில்லை. போதிய அவகாசம் கொடுத்தும் அவர்கள் தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லாததால் தான் தடை செய்யப்பட்டது” என்று கூறுகிறார். மேலோட்டமாக பார்த்தால், ஜென் z தலைமுறையினரின் இந்த பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 பிரபல சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது காரணமாகச் சொல்லப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .