2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜின்பிங்கின் 3ஆவது பதவிக் காலமும் தந்திரோபாயமும்

Freelancer   / 2022 மே 15 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், தந்திரோபாய நடவடிக்கையாக, "பொதுச் செழிப்பு" மீது கவனம் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சீனா தீர்மானித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு மற்றும் உக்ரைன் மோதலால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடையூறு மற்றும் பூச்சிய-கொவிட் கொள்கையின் கடுமையான அமுலாக்கம் ஆகியவற்றால் சீனாவின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

எதிர்வரும் 20ஆவது கட்சி காங்கிரஸுக்கு முன்னதாக, பொருளாதார மந்தநிலையுடன், முதலீட்டாளர்களுக்கு குறைவான கவர்ச்சிகரமான சந்தையாக மாற சீன கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், அதன் "பொது செழிப்பு" கொள்கையிலிருந்து தந்திரோபாயமாக நகர்கிறது என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் மூன்றாவது பதவிக்காலத்துக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு ஜின்பிங் தயாராகும் போது, ​​அவர் சீனாவை தனது ஆட்சியின் கீழ் மிகவும் வளமான, செல்வாக்கு மற்றும் நிலையானதாக சித்தரிக்க முயல்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை "பொது செழிப்பு" என்ற புதிய சகாப்தத்தை ஆவேசமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த டெக் பெஹிமோத்கள் மற்றும் பணக்கார பிரபலங்கள் மீது அபராதம் விதிக்கும் நாட்டின் அதிகாரிகள், இப்போது பொருளாதாரத்தை நிலையானதாகவும் வளர்ச்சியுடனும் வைத்திருப்பதில் தங்கள் கவனத்தை மாற்றியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, நீண்ட கால இலக்காக தொடர்ந்து சித்தரித்து வரும் ஜின்பிங்கின் திட்டங்களை முழுமையாக கைவிடுவதை விட, ஒத்திவைப்பு ஒரு தந்திரோபாய பின்வாங்கலாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
சர்வதேச முதலீட்டாளர்கள் போன்ற பங்குதாரர்களுக்கு இன்னும் வணிகத்துக்காகத் திறந்திருக்கும் என்று பீஜிங் உறுதியளிக்க முயன்றாலும் பீஜிங்கின் தனிப்பட்ட துறை மீதான ஒடுக்குமுறை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள வர்த்தகர்களை தொடர்ந்து ஆட்டிப்படைக்கிறது.

கொவிட்டை எதிர்த்து சீனா கடுமையான முடக்கங்களை விதித்ததாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பொருட்களின் விலையை உயர்த்தியதாலும், சீனாவின் பொருளாதார அமைப்பில் நம்பிக்கை குறைந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .