Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, மிகச்சிறந்த நிர்வாகியெனவும் கருணையுள்ளம் கொண்டவரெனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது புகழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் நேற்று (24) என்ற நிலையிலேயே, இப்புகழஞ்சலியை அவர் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து, தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கு இணங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகழஞ்சலிகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
தனது டுவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, “ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, அவருக்கு என்னுடைய அஞ்சலியைத் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு, தலைமுறைக்கும் நினைவில் நிற்கக்கூடியது. மிகச்சிறந்த நிர்வாகி, கருணை உள்ளம் கொண்டவர், கணக்கில் அடங்காத ஏழை மக்களுக்கு அவரின் நலத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா கருத்துத் தெரிவிக்கையில், “மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளில், என்னுடைய அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன். தமிழகத்தில் விளிம்பு நிலையில், ஏழ்மையில் வாழும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அவர் அர்ப்பணிப்புடன் இருந்தார். தலைமுறைகளுக்கும் ஜெயலலிதாவின் புகழ் அனைவராலும் நினைவுகூரப்படும்” என்றார்.
அதேபோல், பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், தமது கருத்தை வெளிப்படுத்தினார். “மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா அவர்கள், ‘கரும்பாக இனிப்பவர்; இரும்பாக உறுதியாக இருப்பவர்’. அவர் என்மீது காட்டிய தனி அன்பும் பண்பும் என்றும் என் நினைவில்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago