Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகரீதியாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் திடீரென 'நண்பன்' என அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உலக அளவில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்து வந்த அமெரிக்காவும், இந்தியாவும் கடந்த சில மாதங்களாக எதிரெதிர் துருவங்களாக மாறின. தனது எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதை அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கி செல்வதையும் அந்நாடு விரும்பவில்லை.
இதனால் இந்தியா மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அண்மையில் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்து மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். இந்த அதிகபட்ச வரி விதிப்பால் இந்தியாவின் தொழில்துறை ஆட்டம் காண தொடங்கியது.
இந்த சூழலில் தான், யாருமே எதிர்பாராத விதமாக சீனாவிடம் இந்தியா நெருக்கம் காட்டியது. மேலும், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சீனாவிடம் இந்தியா நெருங்கியதை எதிர்பார்க்காத அமெரிக்கா, இதனை தனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்த்தது. இருந்தபோதிலும், தனது பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "இருண்ட சீனாவுக்குள் இந்தியாவையும், ரஷ்யாவையும் தொலைத்து விட்டோம். அவர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்" என ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
டிரம்ப்பின் இந்த பதிவு, அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்தது. மிகப் பெரிய சந்தையை கொண்டிருக்கும் இந்தியாவை டிரம்ப் பகைத்துக் கொண்டதை அமெரிக்க எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில் தான், டிரம்ப்பின் பேச்சில் இன்று திடீர் மாற்றத்தை காண முடிந்தது. இன்றைக்கு வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா உடனான உறவு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், "நான் எப்போதும் மோடியின் நண்பனாகவே இருக்கிறேன். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு சிறப்பானது. இதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. மோடி உடனான எனது நட்பு உங்கள் அனைவருக்குமே தெரியும். இரு மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்காவுக்கு மோடி வந்திருந்தார். மோடி மிகப் பெரிய தலைவர். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து அவர் எண்ணெய் வாங்குவது தான் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அதனால் தான், நாங்கள் இந்தியாவுக்கு அதிகபட்ச வரியை விதித்தோம். 50 சதவீத வரி. இது மிக அதிகமானது தான்" என டிரம்ப் கூறினார்.
டிரம்ப்பின் இந்த பேச்சானது, இந்தியாவிடம் மீண்டும் அமெரிக்கா நட்புக்கரம் நீட்டுவதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "ஜனாதிபதி டிரம்பின் உணர்வுகளையும், இரு நாடுகளின் உறவு தொடர்பான அவரது அணுகுமுறையையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு சிறந்த சர்வதேச கூட்டாளி" என மோடி குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago