Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் வரலாற்று பழமையான பகுதி ஒன்றிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ பரவி, தொடர்ச்சியான வெடிப்புகள், அருகிலுள்ள வீதிகளுக்கு தீ பரவியவில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
வாசனைத் திரவியங்கள், ஏனைய வீட்டுப்பாவனைக்கான இரசாயனங்கள், சட்டரீதியற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு கட்டடத்திலேயே தீ ஆரம்பித்ததாகவும் அருகிலுள்ள நான்கு கட்டடங்களுக்கு மிக வேகமாகப் பரவியதாக தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது.
தீ காரணமாக, சம்பவ இடத்துக்கு அருகில் இடம்பெற்ற திருமண விருந்து, உணவகமொன்றிலிருந்தோர் சிக்கியதுடன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட படங்களின்படி, ஒரு கட்டடத்தின் கதவுகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்தவர்களால் வெளியேற முடியாதிருந்தது. இது தவிர, கட்டடங்கள் அமைந்த வீதிகள், குறுகலாக இருந்த நிலையில் மீட்பு நடவடிக்கையும் தடைப்பட்டிருந்தது.
குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாக, பங்களாதேஷ் தீயணைப்புத் தலைவர் அலி அஹ்மட் தெரிவித்தபோதும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையிலுள்ள 10 பேர் உட்பட குறைந்தது 55 பேர் காயமடைந்ததாக, டாக்கா மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி, நேற்றிரவு 10.10 மணியளவில் ஆரம்பித்த தீயை, ஏறத்தாழ 12 மணித்தியாலங்களின் பின்னரே தீயணைப்புப்படைவீரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், எரிவாயு தாங்கியிலிருந்து தீ ஆரம்பித்திருக்கலாமெனத் தெரிவித்த அலி அஹமட், அடுக்குமாடிக் குடியிருப்புகளுடனிருந்த அறைகளில் இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் விரைவாகப் பரவியதாகக் கூறியுள்ளார்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025